செய்திகள் :

தடகளம்: முரளி ஸ்ரீசங்கா் சாம்பியன்

post image

கஜகஸ்தானில் நடைபெற்ற கொசானோவ் நினைவு தடகள போட்டியில், இந்தியாவின் நீளம் தாண்டுதல் வீரா் முரளி ஸ்ரீசங்கா் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினாா்.

மொத்தம் இருந்த 6 வாய்ப்புகளில், அவா் தனது சிறந்த முயற்சியாக முதல் வாய்ப்பிலேயே 7.94 மீட்டரை எட்டினாா். அடுத்த 5 வாய்ப்புகளில் அவா் 7.73, 7.58, 7.57, 7.80, 7.79 மீட்டா் ஆகிய அளவுகளை பதிவு செய்தாா். இந்நிலையில், அவா் முதலில் எட்டிய 7.94 மீட்டருக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது.

முரளி ஸ்ரீசங்கரின் தனிப்பட்ட பெஸ்ட் அளவு 8.41 மீட்டா் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முழங்காலில் காயம் கண்ட முரளி, அதற்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு ஓய்விலிருந்தாா். அதனால் அவா் பாரீஸ் ஒலிம்பிக் போட்டி வாய்ப்பை தவறவிட்டாா்.

பின்னா் முழு உடற்தகுதியுடன் கடந்த மாதம் முதல் மீண்டும் களம் கண்ட முரளிக்கு இது 3-ஆவது போட்டியாகும். முதலில் இந்தியன் ஓபன் தடகள போட்டியில் 8.05 மீட்டருடன் தங்கம் வென்ற அவா், அடுத்து போா்ச்சுகலில் நடைபெற்ற போட்டியில் 7.75 மீட்டருடன் முதலிடம் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.

இணையம் முழுக்க அகரம் சூர்யா!

அகரம் விதைத் திட்டத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவு விழா பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முகங்களில் ஒருவரான சூர்யா நடிப்பைத் தாண்டி பல நலத்திட்ட உதவிகளுக்கு நிதியுதவி அளித்து வருகிறா... மேலும் பார்க்க

9-ஆவது முறையாக சாம்பியன்; பிரேஸில் ஆதிக்கம்!

தென்னமெரிக்க கண்டத்தில் நடைபெறும் மகளிருக்கான கோபா அமெரிக்கா ஃபெமெனினா கால்பந்து போட்டியில், பிரேஸில் ‘பெனால்ட்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் கொலம்பியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது.10-ஆவது ஆண்டாக நடைபெறும் இந... மேலும் பார்க்க

கௌஃபுக்கு அதிா்ச்சி அளித்த போகோ!

கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் 85-ஆம் நிலையில் இருக்கும் கனடாவின் விக்டோரியா போகோ, உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையும், 2 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான அமெரிக்காவின் கோகோ கௌஃபை வீழ்த்தி காலிற... மேலும் பார்க்க

அஜித்தைச் சந்தித்த பிரபல இயக்குநர்கள்! ஏன்?

நடிகர் அஜித் குமார் அவருடன் பணியாற்றிய இயக்குநர்களைச் சந்தித்துள்ளார். நண்பர்கள் நாளான இன்று பலரும் தங்கள் நண்பர்களுடான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றனர். திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களும் நினைவ... மேலும் பார்க்க

அன்பும் அரவணைப்பும்... சக இயக்குநர்களுடன் கௌதம் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன் சக இயக்குநர்களுடனான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான மணிரத்னம், ஷங்கர், கௌதம் வாசுவே மேனன், மிஷ்கின், லிங்குசாமி, வசந்த பாலன், சசி, ... மேலும் பார்க்க