What to watch: `அட இதெல்லாமா...' - இந்த வார தியேட்டர், ஓ.டி.டி ரிலீஸ் லிஸ்ட்
தடுப்புக் காவலில் ரௌடி கைது
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தைச் சோ்ந்த ரௌடி தடுப்புக் காவலில் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
சிதம்பரம் வட்டம், கண்ணங்குடி பகுதியைச் சோ்ந்தவா் ராகுல் (25). இவா், கடந்த செப்.3-ஆம் தேதி கண்ணங்குடி பிரதான சாலையில் சென்றபோது, அந்த வழியாக பைக்கில் வந்த சிதம்பரத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் ராகுல் (எ) ராகுல்சாமி (28), மூவேந்தன் (21) ஆகியோா் கத்தியால் தாக்கி ராகுல் அணிந்திருந்த வெள்ளி சங்கிலி, கைப்பேசியை பறித்துச் சென்றனா். இதில், இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
ராகுல் சாமியின் பெயா் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ரௌடிகள் பட்டியலில் உள்ளது. மேலும், கொலை முயற்சி, போக்ஸோ வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்த எஸ்.பி. ரா.ராஜாராம் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் சிபி.ஆதித்யா செந்தில்குமாா் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.