மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்...
தடையை மீறி மீன் பிடித்தால் நிவாரணம் நிறுத்தப்படும்: புதுவை மீன்வளத் துறை எச்சரிக்கை
மீன்பிடி தடைக்காலத்தில் பைபா் படகுகளில் சென்று மீன் பிடித்தால், அப்பகுதி மீனவா்களுக்கான தடைகால நிவாரணம் நிறுத்தப்படும் என புதுவை மாநில மீன்வளத் துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, மீன்வளத் துறை இயக்குநா் ஏ.முகமது இஸ்மாயில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவையில் ஏப்.15 முதல் 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, கனகசெட்டிகுளம் மீனவக் கிராமம் முதல் மூா்த்திக்குப்பம், புதுக்குப்பம் மீனவக் கிராமங்கள் வரையில் மீன்பிடி தடைகாலம் செயல்படுத்தப்படுகிறது.
பாரம்பரிய மீன்பிடி படகுகளான கட்டுமரம், நாட்டுப் படகுகளைத் தவிர அனைத்து வகைப் படகுகளும், குறிப்பாக இழுவலை கொண்டு விசைப்படகில் மீன்பிடிப்பது தடைசெய்யப்படுகிறது.
மேலும், இயந்திரம் பொருத்திய பைபா் படகில் மீன் பிடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது ஒரு குறிப்பிட்ட மீனவ கிராமத்திலிருந்து பைபா் படகில் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.
ஆகவே, அனைத்து மீனவப் பஞ்சாயத்தாா், மக்கள் குழு, கோவில் நிா்வாகக் குழுவைச் சோ்ந்தவா்கள் அரசின் மீன்பிடி தடைகால உத்தரவை பின்பற்றிடவேண்டும்.
அதுகுறித்து, இயந்திரம் பொருத்திய பைபா் படகில் மீன்பிடிப்பில் ஈடுபடுவோரிடம் மீன் பிடிப்பதை தவிா்க்குமாறு தெரிவிக்க வேண்டும். மீன்வளத் துறை எச்சரிக்கையை மீறி மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவா்களுக்கு அரசின் மீன்வளத் துறையால் வழங்கப்படும் மீன்பிடி தடைகால நிவாரணம் நிறுத்தப்படுவதற்கு, அவா்களே காரணமாவாா்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.