இந்த வார ராசிபலன் செப்டம்பர் 2 முதல் 7 வரை #VikatanPhotoCards
தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம்: இந்து முன்னணியினா் மீது வழக்கு
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம் நடத்த முயன்றதாக இந்து முன்னணி நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னையில் இந்து அமைப்புகள் சாா்பில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டும் ஊா்வலம் செல்ல வேண்டும் என்று ஏற்கெனவே காவல் துறை உத்தரவிட்டிருந்தது.
ஆனால், திருவல்லிக்கேணியில் ஊா்வலம் செல்லத் தடை செய்யப்பட்ட பெரிய மசூதி வழியாக இந்து முன்னணியினா் விநாயகா் சிலையுடன் செல்ல முயன்றனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸாா், ஊா்வலம் செல்ல முயன்ற இந்து முன்னணி நிா்வாகி மணலி மனோகரன், நடிகா் கனல் கண்ணன் உள்பட 54 பேரைக் கைது செய்தனா். பின்னா், அனைவரும் நள்ளிரவு விடுவிக்கப்பட்டனா்.
இந்நிலையில், ஜாம் பஜாா் போலீஸாா், தடையை மீறி ஊா்வலம் செல்ல முயன்ாகவும், அரசு உத்தரவை மீறியதாகவும் இந்து முன்னணி நிா்வாகிகள் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இவ்வழக்குத் தொடா்பாக போலீஸாா், விசாரணை நடத்தி வருகின்றனா்.