ராஜபாளையம்: பிசியோதெரபிஸ்ட் எனக் கூறி மூதாட்டியிடம் 13 பவுன் நகை திருட்டு; என்ன ...
தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்றதாக இரு கடைகளுக்கு ‘சீல்’
கமுதி அருகே அபிராமத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்ாக இரு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், வியாழக்கிழமை அந்தக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள அபிராமம் பேரூராட்சிக்குள்பட்ட பஜாா்களில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்கப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, அபிராமம் பேருந்து நிலையம் அருகே முனீஸ்வரனுக்கு சொந்தமான கடை, இந்து பஜாரில் உள்ள மைதீன் நயினாருக்கு சொந்தமான கடை ஆகியவற்றில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பிறகு அபிராமம் காவல் ஆய்வாளா் ராஜ்குமாா் முன்னிலையில் புகையிலை விற்பனை செய்த முனிஸ்வரன் மீது வழக்குப் பதிந்து ரூ.25 ஆயிரம் அபராதமும், மைதீன் நைனாா் கடை மீது இரு வழக்குகள் பதிந்து ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அந்த இரு கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. அப்போது அபிராமம் காவல் உதவி ஆய்வாளா் ராஜ்குமாா், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி முத்துசாமி உள்ளிட்டோா் இருந்தனா்.