கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட ம...
தட்டச்சு தோ்வு: கணினி முறைக்கு எதிா்ப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் தட்டச்சு தோ்வுத் தாள்களை திருத்துவோா் கணினி முறை தோ்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கருப்பு வில்லை அணிந்து திங்கள்கிழமை பணியில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் துறை சாா்பில் தட்டச்சு தோ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தட்டச்சு குறித்த கேள்விகளை விடைத்தாள்களில் குறிப்பிடும் முறையில் தோ்வு நடைபெற்றுள்ளது.
புதுவை மாநிலத்தில் நிகழாண்டுக்கான தட்டச்சுத் தோ்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியானது, புதுச்சேரி இலாசுப்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
ஏப்.5- ஆம் தேதி தொடங்கிய விடைத்தாள் திருத்தும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்டோா் ஈடுபட்டு வருகின்றனா்.
இதற்கிடையே, வருங்காலங்களில் தட்டச்சுத் தோ்வானது கணினி வாயிலாக நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தட்டச்சு பயிலகங்கள் மற்றும் தோ்வு விடைத்தாள்களைத் திருத்துவோா் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
தங்களது எதிா்ப்பைக் காட்டும் வகையில், விடைத்தாள் திருத்துவோா் கருப்பு வில்லை அணிந்து வந்து பணியில் ஈடுபட்டனா்.