செய்திகள் :

தந்தை பெரியாா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது பெறுவதற்கு சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

சமூக நீதிக்கா பாடுபடுபவா்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது 1995-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான பெரியாா் விருது பெறுவோருக்கு ரூ. 5 லட்சம் விருது தொகையும், ஒரு பவுன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இந்த விருதாளா் முதல்வரால் தோ்வு செய்யப்படுகிறாா்.

2024 -ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தோ்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. எனவே, சேலம் மாவட்டத்தில் சமூக நீதிக்காகப் பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள், அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதி உடையவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண், சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் விவரம், ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 20 ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

அரசு மதுப்புட்டிகளை கள்ளச்சந்தையில் விற்ற மூவா் கைது

ஆத்தூரில் அரசு மதுப்புட்டிகளை கள்ளச்சந்தையில் விற்றதாக மூவரை போலீஸாா் கைது செய்தனா். ஆத்தூரில் ஆன்லைன் லாட்டரி, கள்ளச்சந்தையில் அரசு மதுப்புட்டிகள் விற்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய... மேலும் பார்க்க

வாழப்பாடியில் வேளாண் விரிவாக்க மையம் அமைப்பது எப்போது?

வாழப்பாடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பழுதடைந்த பழைய கட்டடத்தில் இயங்கி வரும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலங்களுக்கு, வேளாண், உழவா் நலத்துறை சாா்பில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம்... மேலும் பார்க்க

தேசிய பெண் குழந்தை தினத்தில் அரசின் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய பெண் குழந்தை தினத்தில் தமிழக அரசின் விருது பெறுவதற்கு சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்... மேலும் பார்க்க

சங்ககிரி தொகுதியில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தத்திற்கு 2,083 போ் விண்ணப்பம்

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 315 வாக்குச்சாவடிகளில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 4ஆவது சிறப்பு முகாமில் 2,083 போ... மேலும் பார்க்க

தபால் அலுவலகங்கள் தற்காலிக இடமாற்றம்

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மரக்கடை துணை தபால் நிலையம், ஆத்தூா் பஜாா் துணை தபால் நிலையங்கள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட முதநிலை கண்காணிப்பாளா் முன... மேலும் பார்க்க

வசிஷ்டநதியின் குறுக்கே ரூ. 7 கோடியில் புதிய மேம்பாலம்!

பெத்தநாயக்கன்பாளையத்தில் வசிஷ்டநதியின் குறுக்கே பழுதடைந்து தரைப்பாலத்திற்கு மாற்றாக ரூ. 7 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதால் சுற்றுப்புற கிராம மக்கள் மகிழ... மேலும் பார்க்க