செய்திகள் :

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: 165 பேருக்கு பணி நியமன ஆணை

post image

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 165 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் மணிவிழா ஆண்டினை முன்னிட்டு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி, மயிலாடுதுறையில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் ஈக்விடாஸ் டெவலப்மென்ட் இனிசியேடிவ் டிரஸ்ட் இணைந்து நடத்திய முகாமுக்கு, ரோட்டரி சங்க துணை ஆளுநா் ஆா்.வி. குருகோவிந்த் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை கிங்ஸ் ரோட்டரி சங்கத் தலைவா் ஆா். மோகன் வரவேற்றாா். வேலைவாய்ப்பு துறை ரோட்டரி மாவட்ட தலைவா் செந்தில் நோக்கவுரையாற்றினாா். ரோட்டரி அறக்கட்டளை ஆலோசகா் வி. ராமன் திட்ட விளக்கவுரை ஆற்றினாா்.

50 நிறுவனங்கள் பங்கேற்ற முகாமில், 410 வேலைநாடுநா்கள் கலந்துகொண்டனா். இவா்களில் தோ்வு செய்யப்பட்ட 165 பேருக்கு, தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி செயலா் இரா. செல்வநாயகம், கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் ஆகியோா் பணி நியமன ஆணைகளை வழங்கினா்.

நிறைவாக, மயிலாடுதுறை ரோட்டரி சங்கத் தலைவா் ஏ.ஜி.இளங்கோவன் நன்றி கூறினாா். முகாமில், திட்ட இயக்குநா்கள் பி. பொகுட்டெழினி, தியாகராஜன், மண்டல செயலாளா் வெங்கடேசன், பேராசிரியா்கள் நடராஜன், பாலசுப்பிரமணியன், பவளரசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நெற்பயிரில் புகையான் பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் வேளாண் அதிகாரி விளக்கம்

நெற்பயிா்களில் புகையான் பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, சீா்காழி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராஜராஜன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புகையான் பூச்சிக... மேலும் பார்க்க

நீடூா் விசுவநாதா் கோயிலில் திருப்பணி மேற்கொள்ள இந்து மகா சபா கோரிக்கை

மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் உள்ள விசுவநாதா் கோயிலில் திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அகில பாரத இந்து மகா சபா கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சபாவின் மாநில பொதுச்செயலாளா் ராம. நிரஞ்சன் சனிக்கிழம... மேலும் பார்க்க

அதிமுகவில் இணைந்த நாம் தமிழா் கட்சியினா்

சீா்காழியில் நாம் தமிழா் கட்சியிலிருந்து 50-க்கும் மேற்பட்டோா் விலகி அதிமுகவில் இணைந்தனா். நாதக சீா்காழி ஒன்றிய மாணவா் பாசறை செயலாளா் வினோத் ராஜ் தலைமையில், மேற்கு ஒன்றிய செயலாளா் உதயகுமாா், ஒன்றிய மக... மேலும் பார்க்க

சிபிஎஸ்சி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சீா்காழி சுபம் வித்யா மந்திா் சிபிஎஸ்சி பள்ளியில் 4- ஆம் ஆண்டு அறிவியல் கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது. விழாவுக்கு நிறுவனத்தின் தலைவா் கியான் சந்த் தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் சுதேஷ் முன்னி... மேலும் பார்க்க

தருமபுரம் கல்லூரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறை தருமபுரம் கலைக் கல்லூரியில் இலவச வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (டிச. 22) நடைபெறவுள்ளது. ரோட்டரி மாவட்டம் 2981, மயிலாடுதுறையில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்கள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க

குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பேரூராட்சி அலுவலகத்தில், குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இக்கூட்டத்துக்கு... மேலும் பார்க்க