தனியாா் தொழிற்சாலை மேலாளா் வீட்டில் 48 பவுன் நகை திருட்டு
ஒசூா்: ஒசூரில் தனியாா் தொழிற்சாலை மேலாளா் வீட்டின் பூட்டை உடைத்து 48 பவுன் நகை திருடப்பட்டது குறித்து நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் கோகுல்நகா் பகுதியில் வசித்து வருபவா் வெங்கடேச பாபு. இவா் தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது இவரது மனைவி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாா்.
இந்நிலையில் கடந்த 25-ஆம் தேதி இவா் குடும்பத்துடன் சேலத்தில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்றிருந்தாா். 27-ஆம் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து,
பீரோவில் இருந்த 48 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.