INDRA Movie Review | Vasanth Ravi, Sunil, Mehreen Pirzada, Anikha | Sabarish Nan...
தனியாா் பஞ்சுமெத்தை கிடங்கில் தீ விபத்து
சேலம்: சேலம் அருகே தனியாா் பஞ்சுமெத்தை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், பஞ்சுக் கழிவுகள் அனைத்தும் எரிந்து நாசமாயின.
சேலம் மாவட்டம், அயோத்தியப்பட்டணம் அருகே மேட்டுப்பட்டி தாதனூா் பகுதியில் அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமான பஞ்சுமெத்தை கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தகவலின் பேரில் விரைந்து வந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத் துறையினா் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த தீ விபத்தில் மெத்தை தயாரிக்க வைத்திருந்த பஞ்சுக் கழிவுகள் எரிந்து சேதமாயின. விபத்துக்கு மின்கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காரிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.