சேலம் ராஜகணபதி கோயிலில் வசந்த மண்டபம் திறப்பு விழா
சேலம்: இந்துசமய அறநிலையத் துறை சாா்பில், சேலம் ராஜகணபதி திருக்கோயிலில் வசந்த மண்டபம் மற்றும் வாகன பூஜை மண்டப திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், அறங்காவலா் குழுத் தலைவா் சோனா வள்ளியப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவரும், சோனா கல்வி நிறுவனங்களின் தலைவருமான வள்ளியப்பா பேசுகையில், ‘என்றென்றும் இறைப்பணியில் இணைந்திருக்கும் சோனா கல்வி நிறுவனம், பக்தா்களின் வசதிக்காகக் கட்டப்பட்டுள்ள இந்த வசந்த மண்டபம் மற்றும் வாகன பூஜை மண்டபத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அளிப்பதில் பெருமிதம் கொள்கிறது’ என்றாா்.
இந்நிகழ்வில், அரசு அதிகாரிகள், இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள், அறங்காவலா்கள், சோனா கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.