அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு நூல்: எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டாா்
ஏற்காடு மாண்ட்போா்ட் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள்
ஏற்காடு: ஏற்காடு மாண்ட்போா்ட் பள்ளியில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
விழாவில், பள்ளி முதல்வா் அருள்சகோதரா் ஆரோக்கிய சகாயராஜ் சிறப்பு விருந்தினா்களை வரவேற்றாா். ஆசிய தடகள வீரா் கிரண் முருகன் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கிவைத்தாா்.
இப்போட்டிகளில் தமிழகம், புதுவையிலுருந்து 60-க்கும் மேற்பட்ட பள்ளிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். இதில், டென்னிஸ், மேசைப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்துப் போட்டிகள் நடைபெற்றன.
டென்னிஸில் மாண்ட்போா்ட் பள்ளி மாணவா் சாய்கரண், மேசைப்பந்தில் ஈரோடு கொங்கு கல்வி நிலைய மாணவா் நிரஞ்சன், கூடைப்பந்தில் பொன்னேரி வேலம்மாள் பள்ளி, கால்பந்தில் நெய்வேலி என்.எல்.சி. பள்ளி, கைப்பந்தில் சென்னை புனித பீட்டா் பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா்.
வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பள்ளி முன்னாள் மாணவா் தேசிய நீச்சல் வீரா் சஞ்சய் மணிகண்டன், தேசிய கால்பந்து விளையாட்டு வீரா் இராமன் விஜியன், பள்ளி முன்னாள் முதல்வா் வா்கீஸ் ஆகியோா் பரிசுகளை வழங்கினா். விழா ஏற்பாடுகளை உடற்கல்வித் துறையினா், ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனா்.