மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு
வன விலங்குகளை வேட்டையாட முயன்ற மூவா் கைது
சேலம்: சேலம் அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சேலம் வனச்சரக அலுவலா் துரைமுருகன் தலைமையில் வனத் துறையினா் புதன்கிழமை அரியானூா் பகுதியில் உள்ள கஞ்சமலை வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு 3 போ் நாட்டுத் துப்பாக்கியுடன் புள்ளிமான், காட்டுப்பன்றி, முயல் போன்ற வன விலங்குகளை வேட்டையாட முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்களை வனத்துறையினா் பிடித்து விசாரித்ததில், அவா்கள் சேலத்தைச் சோ்ந்த தமிழ்வாணன் (41), மெய்யப்பன் (34), குமரேசன் (31) என்பது தெரியவந்தது.
இவா்கள் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து வன விலங்குகளை வேட்டையாட முயன்ால், வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மூவரையும் வனத்துறையினா் கைது செய்து, சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனா்.