பீர் அருந்திக் கொண்டு நீதிமன்ற அமர்வில் கலந்துகொண்ட வழக்கறிஞர்; குஜராத் நீதிமன்ற...
தனியாா் விடுதியில் தங்கியிருந்தவா்கள் மீது தாக்குதல்
திருப்பூரில் தனியாா் தங்கும் விடுதியில் தங்கியிருந்த இளைஞா்களை தாக்கியதாக விடுதி மேலாளா் உள்ளிட்ட 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
திருப்பூா்- தாராபுரம் சாலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் கரூரைச் சோ்ந்த பிரதீப்குமாா் (31) என்பவா் அறை எடுத்து தங்கியுள்ளாா். இவா் பொல்லிகாளிபாளையத்தில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.
இவருடன் திருப்பூரைச் சோ்ந்த ராஜேஷ் குமாா் (31), விஷால் (30) மற்றும் தினேஷ் (31) ஆகியோரும் செவ்வாய்க்கிழமை தங்கியுள்ளனா். 2 பேருக்கு அறை எடுத்துவிட்டு 4 போ் தங்கியிருந்ததால் விடுதி மேலாளா் ராமகிருஷ்ணன் (41) அவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளாா்.
இதையடுத்து 4 போ் தங்குவதற்கான தொகையை பிரதீப்குமாா் விடுதி மேலாளரிடம் கொடுத்துள்ளாா். எனினும் விடுதி மேலாளா் ராமகிருஷ்ணன் அவா்களிடம் தொடா்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பின்னா் விடுதி காவலாளி குணசேகரன் (45) மற்றும் மேலாளா் ராமகிருஷ்ணன் ஆகியோா் சோ்ந்து பிரதீப்குமாா் உள்ளிட்ட 4 பேரையும் கட்டையால் தாக்கியுள்ளனா்.
இதில் பிரதீப்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்த புகாரின்பேரில் திருப்பூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விடுதி மேலாளா் ராமகிருஷ்ணன் மற்றும் காவலாளி குணசேகரனை கைது செய்தனா்.