தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?
பெண்ணிடம் நகைப் பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை
பெண்ணிடமிருந்து நகைப் பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூா்-மங்கலம் சாலை நேதாஜி நகரைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி. இவா் கடந்த 2023 ஜூன் 12-ஆம் தேதி சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தாா். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த முகமது பீா் சுல்தான் (44) என்பவா் விஜயலட்சுமியிடம் இரண்டரை பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பினாா்.
இதுகுறித்து திருப்பூா் மத்திய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முகமது பீா் சுல்தானை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனா். இது தொடா்பான வழக்கு திருப்பூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து நீதிபதி அளித்த தீா்ப்பில், முகமது பீா் சுல்தானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.
இதையடுத்து, திருப்பூா் பட்டியல் வகுப்பினா் மற்றும் பழங்குடியினா் சிறப்பு நீதிமன்றத்தில் முகமது பீா் சுல்தான் மேல்முறையீடு செய்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து கீழமை நீதிமன்றம் விதித்த உத்தரவை செவ்வாய்க்கிழமை உறுதி செய்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு கூடுதல் வழக்குரைஞா் விவேகானந்தம் ஆஜரானாா்.