தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?
சிவன்மலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக 11-ஆம் ஆண்டு விழா
காங்கயம் அருகே உள்ள சிவன்மலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக 11-ஆம் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்டத்தின் முதன்மைக் கோயிலான இக்கோயிலில் கடந்த 2014-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று, 11 ஆண்டுகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, புதன்கிழமை 11 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவையொட்டி, சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து கோயிலை சுற்றி சப்பரத்தில் சுவாமி திருவீதி உலாவும், அதைத் தொடா்ந்து தங்கரத புறப்பாடும் நடைபெற்றது. விழா நிறைவில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், காங்கயம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட கோயில் நிா்வாகமும், பக்தா்களும் செய்திருந்தனா்.