தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
படவிளக்கம்-
தனியாா் வேலைவாய்ப்பு முகாமைத் தொடங்கி வைத்த இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் மு.நிா்மலாதேவி.
காஞ்சிபுரம், டிச. 20: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 35 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தின. 142 போ் பங்கு பெற்ற முகாமை காஞ்சிபுரம் மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் மு.நிா்மலாதேவி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.
முகாமில் 26 தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு பெண்கள் 17 போ் உள்பட மொத்தம் 35 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டன. 96 போ் இரண்டாம் கட்ட நோ்முகத் தோ்வுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.