செய்திகள் :

தனி ஆள் அல்ல, கடல் நான்... விஜய் பகிர்ந்த செல்ஃபி விடியோ!

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நேற்றைய (ஆக.21) மாநாட்டில் எடுத்த செல்ஃபி விடியோவை பகிர்ந்துள்ளார்.

மதுரை பாரபத்தியில் இரண்டாவது மாநில மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது.

இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினார். அந்த மாநாட்டில் விஜய், “தமிழகத்தில் மீண்டும் வரலாறு திரும்ப உள்ளது. 1967-இல், 1977-இல் அரசியல் மாற்றம் ஏற்பட்டதைப் போல வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தல் மூலமும் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும்.

பெண் குழந்தைகள், பெண்கள், முதியவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசாக, உழவா்கள், நெசவாளா்கள் உள்ளிட்ட உழைக்கும் தொழிலாளா்கள், ஆதரவற்ற முதியோா்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவா் என சிறப்புக் கவனம் தேவைப்படுபவா்களுக்கான அரசை தவெக அமைக்கும்” எனப் பேசியிருந்தார்.

இந்த மாநாட்டில் விஜய் ஒரு செல்ஃபி விடியோவை எடுத்தார். தற்போது அதனை வெளியிட்டுள்ளார். அதில், "உங்க விஜய் உங்க விஜய் உயிரென வர்றேன் நான் உங்க விஜய் உங்க விஜய் எளியவன் குரல் நான் உங்க விஜய் உங்க விஜய் தனி ஆள் இல்ல கடல் நான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய மாநாட்டில் விஜய் குரலில் பாடல் ஒன்றும் வெளியானது. அதைப் பிரதிபலிக்கும் விதமாக இந்த விடியோவில் அதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கேரளத்தில் ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு: தமிழிசை கண்டனம்!

கேரளத்தில் செப்டம்பரில் நடைபெறவுள்ள சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கும் அதனை அவர் ஏற்றுக்கொண்டதற்கும் பாஜக மூத்த தலைவர் ... மேலும் பார்க்க

விஜய் பக்குவப்படவில்லை: அமைச்சர் அன்பில் மகேஸ்

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் தொண்டர்கள் பக்குவப்பட்டதைப்போன்று தெரிகிறது, ஆனால், விஜய் இன்னும் பக்குவப்படவில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். கட்சி ஆரம்பித்துவிட்டோ... மேலும் பார்க்க

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து திருச்சி ரயில் நிலையத்திற்கு வருகை தந்த பாஜக ... மேலும் பார்க்க

ஹைட்ரோகார்பன் திட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க வழங்கப்பட்ட சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தெவித்துள்ளார். இதுகுற... மேலும் பார்க்க

கோவையில் யானை தாக்கி ஒருவர் பலி!

கோவையில் யானை தாக்கி ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கோவை, தொண்டாமுத்தூர் ஆட்டுக்கல் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த மருதாச்சலம், முருகன், சதீஷ் மற்றும் ர... மேலும் பார்க்க

கனிமொழிக்கு பெரியார் விருது: திமுக அறிவிப்பு

திமுக முப்பெரும் விழாவில் வழங்கப்படும் பெரியார் விருதுக்கு தூத்துக்குடி எம்பியும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திமுக முப்பெரும் விழாவையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும... மேலும் பார்க்க