``டாலரின் மதிப்பு உயர்வு பற்றி எனக்கு கவலை இல்லை" - ரகுராம் ராஜன் சொல்லும் காரணம...
தன்னைவிட வயதில் மூத்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது!
திருநெல்வேலி நகரத்தில் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்த இளைஞரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி தச்சநல்லூரைச் சோ்ந்தவா் முகமது மீரான். அதிமுக நிா்வாகியான இவா் சுத்திகரிப்பட்ட குடிநீா் ஆலை நடத்தி வருகிறாா். இவரின் மகன் முகமது சா்ஜூன் (29). இவா், அந்தப் பகுதியில் உள்ள 35 வயதுடைய பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பெண் திருநெல்வேலி நகரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து, முகமது சா்ஜூனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.