ஐ.நா. அமர்வை புறக்கணிக்கும் மோடி! ஜெய்சங்கர் பங்கேற்கிறார்!!
தன்வந்திரி பகவான் கோயிலில் சிறப்பு பூஜை
ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் உள்ள தன்வந்திரி பகவான் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு மகா கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தன்வந்திரி பகவான், மகா கணபதி, முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். காலை, மாலை இரு வேளைகளிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஒசூா் ஐயப்பன் கோயிலில் அத்தப்பூ கோலமிட்டு அபிஷேகம், ஹோமங்கள், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.