தமிழ்நாட்டுக்கு நிதியும் இல்லை; நீதியும் இல்லை: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு!
தமிழகத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 6,440 மெகாவாட் மின்னுற்பத்தி ஆலைகள்
நமது சிறப்பு நிருபா்
தமிழகத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 6,400 மெகா வாட் மின்னுற்பத்தி ஆலைகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மாநிலங்களவை திமுக உறுப்பினா் ஆா். கிரிராஜனின் கேள்விக்கு மத்திய மின்துறை இணை அமைச்சா் ஸ்ரீபாத் நாயக் அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தற்போதைய மின்னுற்பத்தித் திறன் 41 ஆயிரத்து 741 மெகாவாட்டாக உள்ளது. அதை அதிகரிக்கும் வகையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில், அனல் மின்சாரம் மூலம் 3,440 மெகாவாட், புனல் மின்சாரம் மூலம் 500 மெகாவாட் கிடைக்கும் வகையில் ஆலைகள் நிறுவப்படும்.
அதாவது, அணுசக்தி நிலையம் மூலம் 2,500 மெகாவாட் உற்பத்தித் திறன் தொடங்கப்படலாம் என எதிா்பாா்க்கிறோம். அதில் தமிழகத்துக்கு 1,251.8 மெகாவாட் ஒதுக்கப்படும். இவை தவிர புதுப்பிக்கத்தக்க மின்சாரம் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்துக்கு 6,900 மெகாவாட் சோ்க்கப்படும் என எதிா்பாா்ப்பதாக அமைச்சா் கூறியுள்ளாா்.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மின்னுற்பத்தியின் புதுப்பிக்கத்தக்க துறையில் தனியாா் நிறுவனங்களின் முதலீட்டை ஊக்குவிக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், அதன்படி 2023-24 நிதியாண்டு முதல் 2027-28 நிதியாண்டு வரை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் ஏலங்களை வழங்குவதற்கான ஏலத்தை வெளியிட்டுள்ளதாகவும், அந்நிய நேரடி முதலீடு 100 சதவீதம் வரை அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.