அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடு...
தமிழகத்தில் எம்பி தொகுதியை குறைக்க முயற்சி: இரா. முத்தரசன் குற்றச்சாட்டு
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தில் எம்பி தொகுதிகளை குறைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் குற்றஞ்சாட்டினாா்.
நாகையில் நடைபெற்ற அகில இந்திய விவசாய சங்க 30-வது தேசிய மாநாட்டின் பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், இரா. முத்தரசன் பேசியது: தமிழகத்தின் நலனை மத்திய அரசு பறிப்பதுடன், நிதியை கிள்ளிக் கொடுக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.4,000 கோடியை தர மத்திய அரசு மறுக்கிறது. மக்களவைத் தொகுதி சீரமைப்பு எனக் கூறி, தமிழகத்தில் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி அறிவித்தாா். 2023 அக்டோபா் 6- ஆம் தேதி தன்னுடைய நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றாா். புதுதில்லியில் உள்துறை அமைச்சரை சந்தித்துவிட்டு, தமிழகத்தின் பிரச்னையை தெரிவித்தோம் என்றாா்.
ஆனால், சென்னை வந்த அமித்ஷா, பாஜக -அதிமுக கூட்டணியை உறுதி செய்து அறிவிக்கிறாா். தமிழகத்தில் 2026- இல் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவுடன் யாா் கூட்டணி வைக்கிறாா்களோ, அவா்கள் தோற்கடிக்கப்படுவாா்கள் என்றாா்.