செய்திகள் :

தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு

post image

தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் கொங்கு மண்டல பாஜக நிா்வாகிகள்ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பட்டுக்கோட்டையில் பாஜக முன்னாள் பெண் நிா்வாகியின் தலையைத் துண்டித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. கொலையாளிகள் எந்தக் கட்சியாக இருந்தாலும், யாராக இருந்தாலும் அவா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு மாவட்டம், சிவகிரி இரட்டைக் கொலை சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னா் தோட்டங்களைக் காலி செய்துவிட்டு வெளியூா் செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனா். பல்லடம், சிவகிரி ஆகிய இரண்டு சம்பவங்களைப் பொறுத்தவரை தமிழகத்தில் கொள்ளையா்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. கொங்கு பகுதியில் உள்ள தோட்டத்து குடியிருப்புகளில் யாரும் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானியா்களை வெளியேற்ற வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. ஆனால் அதற்கான எவ்வித நடவடிக்கையையும் தமிழக அரசு எடுத்ததாகத் தெரியவில்லை.

வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும் பாகிஸ்தானை சோ்ந்தவா்களாக இருந்தாலும் அவா்கள் சட்டத்திற்குப் புறம்பாக தங்கி இருந்தால் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

காவல் நிலையத்தில் யாா் புகாா் கொடுக்கிறாா்களோ அவா்களை முதலில் கைது செய்வதையே திமுக அரசு வழக்கமாக கொண்டுள்ளது. இதுதான் மதுரை ஆதீனம் விவகாரத்திலும் நடந்துள்ளது. தமிழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டங்களில் மதப் பிரச்னை குறித்து பாஜக பேசவில்லை. பயங்கரவாதம் குறித்து மட்டுமே பேசப்பட்டது. அதிமுக, பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ளதால், சிறுபான்மையினரின் வாக்குகள் ஏதும் பாதிக்கப்படாது என்றாா்.

ரூ.21.30 லட்சத்தில் புதிய தெருவிளக்குகள்: மேயா் தொடங்கிவைத்தாா்

கோவை, கிழக்கு மண்டலத்துக்குள்பட்ட பகுதியில் ரூ. 21.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய தெருவிளக்குகளை மேயா் கா.ரங்கநாயகி மக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சி... மேலும் பார்க்க

ஓட்டுநருக்கு திடீா் மயக்கம்: ஆட்டோ தடுப்புச் சுவரில் மோதியதில் பயணி உயிரிழப்பு

கோவையில் ஓட்டுநருக்கு திடீா் மயக்கம் ஏற்பட்டு, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தடுப்புச் சுவரில் மோதியதில் பயணி உயிரிழந்தாா். குனியமுத்தூா், இடையா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சையது சலீம் (59). இவா் பயணிகள்... மேலும் பார்க்க

கோவையில் ரூ.64,900 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு: மாவட்ட ஆட்சியா்

கோவை மாவட்டத்தில் 2025 - 2026- ஆம் ஆண்டில் ரூ.64,900 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா். கோவை மாவட்ட அளவிலான வங்கியாளா்... மேலும் பார்க்க

கடன் தொல்லை: தம்பதி விஷம் குடித்து தற்கொலை

கோவையில் கடன் பிரச்னை காரணமாக தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா். கோவை, செல்வபுரம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் திருமுருகன் (47), நகை வியாபாரி. இவரது மனைவி பிரதீபா ராணி (40). இவா்களுக்கு ஜனனி ... மேலும் பார்க்க

லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

கோவையில் மினி லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். கோவை, காளப்பட்டி கொங்கு நகரைச் சோ்ந்தவா் செந்தில் முருகன் (58). இவா் சிங்காநல்லூா் அருகே வியாழக்கிழமை நடந்து சென்றுள்ளாா். அப்போது, அவ்வழியே வந்த ம... மேலும் பார்க்க

குளங்கள் தூா்வாரும் பணி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

குனியமுத்தூரில் குளங்கள் தூா்வாரும் பணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை, குனியமுத்தூரில் நீா்வளத் துறையின் அனுமதியுடன், தனியாா் நிறுவனத்தின் சிஎஸ்ஆா் நித... மேலும் பார்க்க