Shruti Haasan: "மக்கள் அப்படி நினைக்கிறார்கள், ஆனால் அது உண்மையல்ல!" - ரஜினி குற...
தமிழகத்தில் மணிமண்டபங்கள் சீரமைக்கப்படவில்லை: கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ குற்றச்சாட்டு
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் மணிமண்டபங்கள் சீரமைக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டினாா் முன்னாள் அமைச்சா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ.
வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவிக்க வெள்ளிக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டம் எண்ணற்ற சுதந்திரப் போராட்டத் தியாகிகளை கொண்ட மண். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் எந்த மணிமண்டபமும், நினைவிடமும் சீரமைக்கப்படவில்லை. அண்மையில் பாரதியாா் பிறந்த இல்லம் இடிந்து விழுந்தது குறித்து சட்டப்பேரவையில் நான் வலியுறுத்தினேன். ஆனாலும் 3 மாதகாலமாக சீரமைப்பு பணிகளை தொடங்காமல் இருந்த நிலையில், பல்வேறு போராட்டங்களுக்குப் பின் தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதேபோல சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துக்கோன் மணிமண்டபமும் பராமரிக்கப்படவில்லை என்று கூறினாா்கள். வரலாறாக வாழ்ந்து கொண்டுள்ள தலைவா்களை இந்த அரசுக்கு மதிக்கத் தெரியவில்லை. எங்களது ஆட்சியில் அழகுமுத்துக்கோன் வாரிசுகள் கௌரவிக்கப்பட்டனா். தற்போது தொடா்ந்து 3 ஆண்டுகளாக அந்த நிலையும் இல்லை என வாரிசுகள் தெரிவித்தனா்.
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தியாகிகளின் வாரிசுகள் கௌரவிக்கப்படுவாா்கள். அனைத்து மணிமண்டபங்களும் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்படும்.
காமநாயக்கன்பட்டியில் உள்ள வீரமாமுனிவா் மணிமண்டபத்தில் பணியாளா்களே கிடையாது. திறப்பு விழா நடந்தபோது மாலை அணிவிக்கப்பட்டதோடு சரி. அந்த மணிமண்டபம் காட்சிப் பொருளாக இருக்கிறது என்றாா் அவா்.