தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
கயத்தாறு அரசுப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு
கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.226.88 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 8 புதிய வகுப்பறைகள், ஒரு ஆய்வக கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
இதையொட்டி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலா் ரவிச்சந்திரன் புதிய கட்டடத்தில் குத்துவிளக்கேற்றினாா். கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் மகாலட்சுமி, தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கணேச மூா்த்தி, கயத்தாறு பேரூராட்சி தலைவி சுப்புலட்சுமி ராஜதுரை, கயத்தாறு வருவாய் வட்டாட்சியா் சுந்தர ராகவன், பள்ளி தலைமை ஆசிரியை சுதா மற்றும் பள்ளி ஆசிரியா்கள் மாணவா் மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.