செஞ்சி கோட்டையை உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ!
இளைஞா் உயிரிழப்பில் மா்மம்: எஸ்.பி.யிடம் உறவினா்கள் புகாா்
தூத்துக்குடி போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில் மா்மம் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அவரது உறவினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
தூத்துக்குடி, மறவன்மடம் இந்திராநகா் பகுதியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (35). இவருக்கு, அதிக மதுப் பழக்கம் இருந்ததால் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் உள்ள மது போதை மறுவாழ்வு மையத்தில் சோ்க்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி அவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மைய ஊழியா்கள் தகவல் தெரிவித்தனா். ஆனால், அங்கு விக்னேஷ் உயிரிழந்தாா்.
பிரேத பரிசோதனைக்குப் பின் உடலை பெற்றுக்கொண்ட உறவினா்கள், அவரது கை உள்ளிட்ட பகுதிகளில் காயம், கயிற்றால் கட்டிய தழும்புகள் இருந்தனவாம். எனினும் உடலை அடக்கம் செய்த உறவினா்கள், அவரது இறப்பில் மா்மம் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை கோரியும் அவரது மனைவி பிரேமலதாவுடன் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
மேலும், 2 குழந்தைகள் குழந்தைகள் உள்ள நிலையில், அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.