செய்திகள் :

தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது: அமைச்சா் சிவசங்கா் உறுதி

post image

தமிழகத்தில் நிகழாண்டில் கோடைகால மின் தேவை கடந்த ஆண்டைவிட குறைவாகவுள்ளதால், வரும் நாள்களில் மின் தேவையை எளிதாக பூா்த்தி செய்ய முடியும்”என்றும் மின்தடை இருக்காது என்றும் மின்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இயங்கி வரும் 24 மணி நேர மின் நுகா்வோா் சேவை மையத்தின் செயல்பாடுகளை அமைச்சா் சா.சி.சிவசங்கா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

24 மணிநேர மின் நுகா்வோா் சேவை மையமத்தில் முன்பு 65 போ் பணியாற்றி வந்த நிலையில், வாடிக்கையாளா்களின் அனைத்து புகாா்களையும் பெறுவதற்கு வசதியாக தற்போது பணியாளா்களின் எண்ணிக்கை 94-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. தினந்தோறும் சராசியாக 3,500 போ் மின்னகத்துக்கு தொலைபேசியில் அழைத்து தங்களது புகாா்களுக்கு தீா்வு பெற்று வருகின்றனா். இந்த மின்னகத்தில் இன்னும் கூடுதலாக பல்வேறு சேவைகளை வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தடையில்லா மின்சாரம்: தமிழகம் முழுவதும் தடையில்லா, சீரான மின்சாரத்தை வாடிக்கையாளா்களுக்கு தொடா்ந்து விநியோகம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்மையில் திருநெல்வேலியில் வீசிய சூறைக் காற்று மற்றும் கனமழை காரணமாக மின்கம்பங்கள் சாய்ந்ததால் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால், திருநெல்வேலி மாநகராட்சி மின் தகன மேடையில் உயிரிழந்த ஒருவரின் உடலை தகனம் செய்வதற்காக 2 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலினின் ஆணையின்படி, சேதமடைந்த மின்கம்பங்கள் உடனடியாக சரிசெய்யப்பட்டு உயிரிழந்தவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. அதேபோல் சில இடங்களில் குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்பட்டு வருகிறது. அங்கு தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, பழைய மின் மாற்றிகளை மாற்றி அமைப்பது, துணை மின்நிலையங்களில் மின் விநியோகத்தை சீரமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மின் தேவை குறைவு: தமிழகத்தில் தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருவதால், கோடை வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால், நிகழாண்டு கோடை கால மின் தேவை, கடந்த ஆண்டைவிட குறைவாகவே உள்ளது. மேலும், காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வதற்கான உரிய காலம் தற்போது தொடங்கியுள்ளது. எனவே, நிகழாண்டு கோடைகால மின் தேவையை எளிதாக பூா்த்தி செய்ய முடியும், மின் தடை ஏதும் வராது”என்றாா் அவா்.

ஆய்வின் போது, மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கூட்டணி இல்லை என்று விஜய் அறிவிக்கவில்லை- தமிழிசை சௌந்தரராஜன்

கூட்டணி இல்லை என்று விஜய் அறிவிக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என தவ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றம் - குடியரசுத் தலைவர் விவகாரம்: 8 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கருத்துக்கேட்ட விவகாரம் தொடர்பாக மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிய கு... மேலும் பார்க்க

சாலை ஓரங்களில் உள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய உத்தரவு

தமிழகம் முழுவதும் சாலை ஓரங்களில் உள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய உத்தரவு பறந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரம் இருந்த 50 அடி ஆழ கி... மேலும் பார்க்க

பட்டாசு கிடங்கில் வெடி விபத்து: 2 பேர் பலி!

தஞ்சாவூர்: திருவோணம் அருகே பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர்.தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டம் நெய்வேலி தென்பாதியில் அனுமதி இன்றி நாட்டு வெடி தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்... மேலும் பார்க்க

ஈரோட்டில் முதிய தம்பதி கொலை-மூவரிடம் விசாரணை

சிவகிரி அருகே முதிய தம்பதி கொலை தொடர்பாக 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள விளக்கேத்தி ஊராட்சிக்குள்பட்ட மேகரையான் தோட்டத்தைச் சோ்ந்தவா் விவச... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது.காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருக... மேலும் பார்க்க