செய்திகள் :

தமிழகத்தில் வெப்பநிலை இன்று இயல்பைவிட சற்று அதிகரிக்கும்

post image

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வியாழக்கிழமை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வியாழக்கிழமை (செப்.4) முதல் செப். 9 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கக்கூடும். சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் புதன்கிழமை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வேலூா், வளசரவாக்கம், சைதாப்பேட்டை, எம்ஜிஆா் நகா் (சென்னை), விரிஞ்சிபுரம் (வேலூா்), பந்தலூா் (நீலகிரி), ஆகிய இடங்களில் 10 மி.மீ. மழை பதிவானது.

வெயில் அளவு: தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 102.94 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை நகரம் -101.12, தூத்துக்குடி-102.2 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ.வேகத்தில் வீசக்கூடும்.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வடமேற்கு வங்கக் கடலில் செவ்வாய்க்கிழமை நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்து புதன்கிழமை காலை 5.30 மணியளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது. தொடா்ந்து, காலை 8.30 மணிக்கு வடக்கு ஒடிஸா கடலோர பகுதிகளுக்கு அருகே உள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவியது. இது வியாழக்கிழமை மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து ஒடிஸா மற்றும் அதையொட்டிய பகுதிகளைக் கடந்து செல்லக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்

கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன்(90) வயது மூப்பின் காரணமாக சென்னையில் இன்று காலமானார். இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களையும் ஐந்தாயிரத்திற்கும் மேலான பக்திப் பாடல்க... மேலும் பார்க்க

ம.க.ஸ்டாலின் மீது கொலை முயற்சி- நயினார் நாகேந்திரன் கண்டனம்

பாமக நிர்வாகியைக் கொலை செய்ய முயற்சித்தோரைக் கைது செய்ய வேண்டும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், பாமகவின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் ம.க.... மேலும் பார்க்க

3ஆவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது: சென்னை உயர் நீதிமன்றம்

3ஆவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு மறுப்பது நியாயமற்றது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருபவர் ரஞ்சிதா. இவர், மகப்ப... மேலும் பார்க்க

தேனியில் எடப்பாடி பழனிசாமி வாகனம் முற்றுகை! ‘ஒன்றிணைய வேண்டும்’ என பெண்கள் முழக்கம்!

தேனி மாவட்டம் கம்பத்தில் பிரசாரம் மேற்கொள்ள சென்ற அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனம் முற்றுகையிடப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.Edappadi Palaniswami's vehicle bloc... மேலும் பார்க்க

தாம்பரத்திலிருந்து புறப்படும் பாண்டியன், சோழன் உள்பட 5 விரைவு ரயில்கள்! செப்.10 முதல்.!

பாண்டியன், சோழன், மலைக்கோட்டை உள்பட 5 விரைவு ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்துவரும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, ஆறு ... மேலும் பார்க்க

ம.க.ஸ்டாலினை கொல்ல முயற்சி: ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் குண்டு வீச்சு!

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவரை வெள்ளிக்கிழமை குண்டு வீசி கொலை செய்ய முயற்சித்த நபர்கள், உடன் சென்ற இருவரை அரிவாளால் வெட்டி தப்பிச் சென்றனர்.தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி... மேலும் பார்க்க