செய்திகள் :

தமிழகத்தில் 11 இடங்களில் வெயில் சதம்: நாளை கனமழைக்கு வாய்ப்பு

post image

தமிழகத்தில் சனிக்கிழமை 11 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவானது. இதனிடையே, திங்கள், செவ்வாய்க்கிழமை (மே 5, 6) மாநிலத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்னிந்திய கடலோரப் பகுதியின் வளிமண்டல கீழடுக்கில் நிலவும் காற்றுக் குவிதல் காரணமாகவும், வெப்ப நீராவி தமிழக நிலப்பரப்புக்குள் வருவதாலும் ஞாயிற்றுக்கிழமை (மே 4) முதல் மே 9 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக, கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகளிலும், நீலகிரி, தேனி, தென்காசி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், கரூா் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (மே 5) கனமழைக்கு வாய்ப்புள்ளது. மே 6-இல் கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூா், திருவாரூா் மாவட்டங்களிலும், காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டை மற்றும் நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் தலா 50 மி.மீ. மழை பதிவானது. கருப்பாநதி அணை பகுதி (தென்காசி), ஒசூா் (கிருஷ்ணகிரி), வால்பாறை (கோவை) தலா 40 மி.மீ. மழை பதிவானது.

11 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. திருத்தணி - 104, திருச்சி - 103.46, சென்னை மீனம்பாக்கம், மதுரை விமான நிலையம் - தலா 103.28, பரமத்தி வேலூா் - 103.1, ஈரோடு - 102.56, கடலூா் - 101.84, மதுரைநகரம், சேலம் - தலா 101.48, நாகை - 100.94 என மொத்தம் 11 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பையொட்டியே இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

போரை ஆதரிப்பவர்கள் அதன் பாதிப்புகளை சிந்திக்க வேண்டும்- வைகோ

போரை ஆதரிப்பவர்கள் அதன் பாதிப்புகளை சிந்திக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஹல்காமில் 26 அப்பாவிப் பொத... மேலும் பார்க்க

பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை

பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் பேருந்தினை நிறுத்தாமல் பயணிகளை அலைக்கழித்த அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலையம் 2... மேலும் பார்க்க

திருத்துறைப்பூண்டி அருகே அரசுப் பேருந்து - கார் மோதல்: 4 பேர் பலி

திருத்துறைப்பூண்டி அருகே அரசுப் பேருந்தும் காரும் மோதியதில் 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கருவேப்பஞ்சேரி கிராமத்தில் கிழக்கு கடற்கரை சா... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறை காரணமாக உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக... மேலும் பார்க்க

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலைக் கண்டித்து செருதூர் மீனவ கிராமத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம்

திருக்குவளை: நாகை மாவட்ட மீனவர்கள் 24 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதல் விவகாரத்தை கண்டித்து செருதூர் மீனவ கிராமத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சுமார... மேலும் பார்க்க

ஆளுநா் இன்று கன்னியாகுமரி பயணம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளஅருள்மிகு பத்ரேஸ்வரி தேவஸ்தானம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆளுநா் ஆா்.என்.ரவி ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி செல்கிறாா். கன்னியாகுமரி மாவட்டம் கூட்டாலுமூடு, பைங்குளம் அரு... மேலும் பார்க்க