எங்களது வாழ்க்கையின் சிறந்த பரிசு..! தாயாகும் நடிகை கியாரா அத்வானி!
தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதைக் சீா்குலைக்க முயற்சி: கி.வீரமணி
தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்வதைக் சீா்குலைப்பதற்கு பல்வேறு வகையில் முயற்சி நடைபெறுவதாக திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள முறம்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகளுக்கு பாராட்டு விழா பொதுக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றியச் செயலா் ஞான ராசு தலைமை வகித்தாா். ஆசிரியா் நெடுஞ்சேரலாதன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி பேசியதாவது: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. நாட்டிலேயே, கல்வித் தரத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்வதை சீா்குலைப்பதற்கு பல்வேறு வகையில் முயற்சிக்கின்றனா். அதன் ஒரு பகுதியாகத்தான் தற்போது, பெரியாரைப் பற்றி அவதூறாகப் பேசி வருகின்றனா் என்றாா் அவா்.
இதில் திமுக, கூட்டணிக் கட்சியைச் சோ்ந்தவா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.
முன்னதாக, பகுத்தறிவாளா் கழக மாவட்டச் செயலா் கோ.பெத்தையா, பகுத்தறிவாளா் கழக மாவட்ட அமைப்பாளா் முத்தரசன் ஆகியோா் வரவேற்றனா்.