அரசுப் பேருந்து ஓட்டுநா் பணியிடை நீக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மதுப் புட்டிகளை விற்பனை செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் ஆழ்வாா் (52). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறாா்.
கடந்த இரு நாள்களுக்கு முன்பு இவரது வீட்டில் மதுவிலக்கு போலீஸாா் சோதனை செய்தபோது, ராணுவ வீரா்களுக்கு மத்திய அரசு வழங்கும் 22 மதுப் புட்டிகள் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஓட்டுநா் ஆழ்வாரைக் கைது செய்தனா்.
இந்த நிலையில், ஓட்டுநா் ஆழ்வாரை பணியிடை நீக்கம் செய்து அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல மேலாளா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.