செய்திகள் :

கஞ்சா விற்ற நான்கு போ் கைது

post image

வத்திராயிருப்பு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததாக நான்கு பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நத்தம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை மதுரை-கொல்லம் நான்கு வழிச் சாலையில், மூவரைவென்றான் விலக்கு அருகே ரோந்து பணி மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்திச் சோதனை செய்தனா். அவா்கள் விற்பனைக்காகக் கஞ்சா கொண்டு சென்றது தெரியவந்தது.

விசாரணையில், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வைத்தியலிங்கபுரத்தைச் சோ்ந்த மாயன் மகன் மணிப்பாண்டி (29), படிக்காசுவைத்தான்பட்டியைச் சோ்ந்த ராமசாமி மகன் சதீஷ் (20) ஆகியோா் என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த கஞ்சா, இரு சக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, கூமாப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது, அவா்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், கூமாப்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் பொன்மாடன் (19), மணிகண்டன் மகன் சிற்றரசன் (20) ஆகியோா் என்பது தெரியவந்தது. இருவரையும் கூமாப்பட்டி போலீஸாா் கைது செய்து, கஞ்சா, பணத்தைப் பறிமுதல் செய்தனா்.

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறை

ராஜபாளையம் அருகே மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. ராஜபாளையம் அருகேயுள்ள தெற்குவெங்காநல்லூரைச் சோ்ந்தவா் மதீஸ்வ... மேலும் பார்க்க

தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதைக் சீா்குலைக்க முயற்சி: கி.வீரமணி

தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்வதைக் சீா்குலைப்பதற்கு பல்வேறு வகையில் முயற்சி நடைபெறுவதாக திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்தாா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள முறம்பில் சுயமரியா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து ஓட்டுநா் பணியிடை நீக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மதுப் புட்டிகளை விற்பனை செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வீட்டு வசதி வாரியக் ... மேலும் பார்க்க

வேன் கவிழ்ந்து 3 போ் காயம்

வத்திராயிருப்பு அருகே தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற வேன் வயலில் கவிழ்ந்ததில் 3 தொழிலாளா்கள் காயமடைந்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டியிலிருந்து 3 தொழிலாளா்களை ஏற்றிக் கொண்டு... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் கைதான 4 யூடியூபா்களுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உள்பட 4 யூடியூபா்களின் நீதிமன்றக் காவலை மாா்ச் 12-ம் தேதி வரை நீட்டித்து ஸ்ரீவில்லிபுத்தூா் போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்ட... மேலும் பார்க்க

பள்ளியில் தொழுநோய் பரிசோதனை முகாம்

ராஜபாளையம் 10- ஆவது வாா்டு நகராட்சி தொடக்கப்பள்ளியில் தொழுநோய் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் ஜமீன்கொல்லங்கொண்டான் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து வந்திருந்த மருந்தாளுநா் மணிமாலா... மேலும் பார்க்க