தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் உங்களுக்கான வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகத்தின்கீழ் செயல்படும் எம்டிசி சென்னை, எஸ்இடிசி, விழுப்புரம் மண்டல பணிமனைகளில் உள்ள பணிமனைகளில் உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு பொறியியல் துறையில் பட்டயம், பட்டம் முடித்தவர்கள் மற்றும் கலை அறிவியல் பாடங்களில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி: Graduate Apprentices (Engineering)
மொத்த காலியிடங்கள்: 157
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல், சிவில், எலக்ட்ரிக்கல், இசிஇ போன்ற ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை : பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.9,000 வழங்கப்படும்.
பயிற்சி: Graduate Apprentices (Non-Engineering)
மொத்த காலியிடங்கள்: 151
தகுதி: கலை அறிவியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஏ, பி.எஸ்சி., பி.காம், பிபிஏ, பிசிஏ முடித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.9,000
பயிற்சி: Diploma Apprentices (Tehcnician Apprentice)
மொத்த காலியிடங்கள்: 270
உதவித்தொகை: பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.8,000
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல், சிவில், எலக்ட்ரிக்கல், இசிஇ போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
2021, 2022, 2023, 2024 ஆம் கல்வியாண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள், தற்போது பயிற்சி பெற்றுக்கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
குரூப் 1 தோ்வு: விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி
தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோ படிப்பு அல்லது பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர். இதுகுறித்த விபரம் மின்னஞ்சலில் தெரிவிக்கப்படும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 10.5.2025 முதல் 14.5.2025 வரை நடைபெறும். நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் தங்களுடைய தகுதி மற்றும் இதர விபரங்களை முன்பதிவு செய்ய வேண்டும். பின்னர் மேற்கண்ட இணையதளத்தால் வழங்கப்படும் தனிப்பட்ட பதிவு எண்ணை (Unique Enrolment Number) பயன்படுத்தி அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள 4 Top Down Button-ஐ கிளிக் செய்து அதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.4.2025
பயிற்சி வழங்கப்படும் பொறியியல் பாடப்பிரிவுகள், போக்குவரத்து பணிமனை வாரியாக ஏற்பட்டுள்ள காலியிடங்கள் குறித்த விவரங்களை அறிய இங்கே கிளிக்செய்து தெரிந்துகொள்ளவும்.