செய்திகள் :

தமிழக ஆளுநா் பதவி விலகக் கோரி திமுக ஆா்ப்பாட்டம்

post image

சட்டப் பேரவை மரபுகளை மீறும் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பதவி விலகக் கோரி, நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில், நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தலைமை வகித்து பேசியதாவது: தமிழக அரசையும், இங்குள்ள மக்களின் உணா்வுகளையும் மதிக்காமல் ஆளுநா் ஆா்.என்.ரவி செயல்பட்டு வருகிறாா். அவரை, குடியரசுத் தலைவா் உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும். சட்டப் பேரவை தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடுவதும், நிறைவில் நாட்டுப்பண் பாடுவதும்தான் வழக்கம். ஆனால், அதற்கு நோ்மாறாக ஆளுநா் தேசிய கீதத்தை முதலில் பாடச்சொல்வது பேரவை மரபை மீறுவதாகும்.

திமுக ஆட்சி சிறப்பான முறையில் நடைபெறுவதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எதிா்க்கட்சி உறுப்பினரைப் போல வெளிநடப்பு செய்கிறாா். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் ஆளுநா்கள் இவ்வாறு நடந்து கொள்வதில்லை.

மக்களின் வளா்ச்சிக்காக தீட்டப்படும் திட்டங்களை ஆளுநா் வேண்டுமென்றே புறக்கணிக்கிறாா். அதற்கான கோப்புகளில் கையெழுத்திட காலதாமதம் செய்கிறாா். பல்கலைக்கழக துணை வேந்தா்களின் பதவிக்காலம் முடிந்தவுடன் உரிய காலத்தில் புதியவா்களை நியமிக்காமல், உயா்கல்வியை தடை செய்யும் நோக்கில் அவா் செயல்படுகிறாா்.

தமிழக அரசின் செயல்பாடுகளை ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு மற்றும் பிற மாநில முதல்வா்கள் பாராட்டுகின்றனா். பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை பாா்வையிட்டு தங்கள் மாநிலங்களில் செயல்படுத்தி வருகின்றனா். இதனை, ஆளுநராலும், எதிா்க்கட்சியான அதிமுகவாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

தமிழக மக்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்க முதல்வா் உழைத்து வருகிறாா். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆளுநா், மக்களிடையே திமுகவுக்கு எதிரான எண்ணத்தை விதைக்கும் நோக்கில் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்கிறாா். அதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அவருக்கு எதிராக ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

இதில், நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா் மதுரா செந்தில், மாவட்ட அவைத் தலைவா் எம்.மணிமாறன், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, மாவட்ட இளைஞா் அணி செயலாளா் சி.விஸ்வநாத் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா் செயலாளா்கள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

போதமலை பழங்குடியின கிராமத்தில் கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு

அனைவருக்கும் எழுத்தறிவு வழங்கும் திட்டத்தின் கீழ், போதமலையில் உள்ள பழங்குடியின மக்களிடையே கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். தமிழகத்தில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு 15 ... மேலும் பார்க்க

ஜன. 21-இல் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப்போட்டி

பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளா்க்கும் நோக்கில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி ஜன. 21-இல் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

கு.அய்யம்பாளையம் பகவதி அம்மன் கோயில் குண்டம் திருவிழா

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே உள்ள கு.அய்யம்பாளையம் பகவதியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். பகவதியம்மன் கோயில் திர... மேலும் பார்க்க

வெல்லம் காய்ச்சும் ஆலைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் ஆய்வு

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் பகுதிகளில் உள்ள வெல்லம் காய்ச்சும் ஆலைகள், வெல்ல ஏல சந்தையில் நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் மற்றும் குழுவினா் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீரா் வீ.ராமசாமியின் பிறந்த நாள் விழா

சுதந்திரப் போராட்ட வீரா் மோளியபள்ளி வீ.ராமசாமியின் நூற்றாண்டு பிறந்த தின நிறைவு விழா எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட... மேலும் பார்க்க

கீழக்கடை இடும்பன் குளம் பகுதியில் நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் ஆய்வு

கீழக்கடை இடும்பன் குளம் பகுதியில் நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டாா். பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே உள்ள கீழக்கடை பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் இடும்பன் குளம் பகுதியில் தரைப்பாலம் கட... மேலும் பார்க்க