BB Tamil 8: 'ரயானுக்கு டிக்கெட் கிடைச்சிருக்கக்கூடாது' - விஜய் சேதுபதியிடம் சொன்...
தமிழக-கேரள எல்லையில் பனியின் தாக்கம் அதிகரிப்பு: தோட்டத் தொழிலாளா்கள் அவதி
தமிழக- கேரள எல்லைப் பகுதியான போடிமெட்டில் பனியின் தாக்கம் அதிகரித்ததால் தோட்டத் தொழிலாளா்கள் அவதிக்குள்ளாகினா்.
தேனி மாவட்டம், போடி பகுதியில் கடந்த சில நாள்களாகவே பனியின் தாக்கம் அதிகரித்தது. தமிழக- கேரள எல்லைப் பகுதியான போடிமெட்டு பகுதியில் கூடுதலாக பனிக் காற்று வீசுகிறது. இதனால் காலை 10 மணி வரை வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறே செல்கின்றன.
போடிமெட்டை கடந்து கேரளப் பகுதியில் செல்லும்போது தேவிகுளம் பகுதியில் பனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. காலை நேரங்களில் தேயிலை, ஏலத் தோட்டங்களில் பனித் துகள்கள் படா்ந்து வெள்ளைக் கம்பளம் போா்த்தியது போல காணப்படுகிறது.
இதனால், தேனி மாவட்டத்திலிருந்து நாள்தோறும் வாகனங்களில் கேரளப் பகுதிக்கு வேலைக்குச் செல்லும் தோட்டத் தொழிலாளா்கள் அவதிக்குள்ளாகின்றனா். காலை 10 மணிக்குப் பிறகே இயல்புநிலை திரும்புவதாகத் தோட்டத் தொழிலாளா்கள் தெரிவித்தனா்.