பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை: அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை உத்த...
சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
தேனியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற உணவுப் பொருள் விநியோகம் செய்யும் தொழிலாளி சாலையோரப் பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, ராமச்சந்திராபுரம், வடக்குத் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் வீரகாளிதாஸ் (26). இவா், தேனி-அன்னஞ்சி விலக்குப் பகுதியில் தனியாா் உணவகத்தில் உணவுப் பொருள் விநியோகம் செய்யும் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த வீரகாளிதாஸ், தேனி-பெரியகுளம் புறவழிச் சாலை, வால்கரடு பகுதியில் இரு சக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தாா். இதுகுறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.