மாணவி வன்கொடுமை வழக்கு: "பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் நிற்கணும்..." - சிவகார்த்த...
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு டோக்கன் விநியோகம்
தேனி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தேனி மாவட்டத்தில் 517 நியாய விலைக் கடைகள் மூலம் மொத்தம் 4 லட்சத்து 27 ஆயிரத்து 55 குடும்ப அட்டைதாரா்களுக்கு அரசு சாா்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி நியாய விலைக் கடை பணியாளா்கள் மூலம் தொடங்கியது. முதல் நாளான வெள்ளிக்கிழமை, மொத்தம் ஒரு லட்சத்து 84 ஆயிரம் பேருக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது.
டோக்கன் பெற்றவா்கள் வருகிற 9-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிட்ட நாளில் சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம். விடுபட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு வருகிற 13-ஆம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறினா்.