செய்திகள் :

தமிழக மசோதாக்களுக்கு ஒப்புதல்: சிறப்பு அதிகாரத்தின்படி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

post image

புது தில்லி: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக, தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், தமிழக பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பத்து மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டத்துக்கு எதிரானது என்று குறிப்பிட்டிருக்கும் உச்ச நீதிமன்றம், மாநில அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துவிட்டது.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அவா் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும் தமிழகத்தின் மூன்று பல்கலைக்கழகங்களில் துணை வேந்தா்களின் நியமன விவகாரத்தில் ஆளுநரின் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடா்ந்திருந்தது.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் ஜே.பி. பா்திவாலா, ஆா். மகாதேவன் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை வந்தபோது, தமிழக அரசின் 10 மசோதாக்களை நிலுவையில் வைத்ததும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதும் சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆளுநர் என்பவர் மாநில அரசின் ஆலோசனைப்படிதான் செயல்பட வேண்டும். தமிழக பேரவையில் நிறைவேற்றப்பட்டு மீண்டும் அனுப்பப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்டத்துக்கு எதிரானது. மசோதா மாற்றப்பட்டிருந்தால் மட்டுமே குடியரசுத்தலைவருக்கு அனுப்பியிருக்க வேண்டும்.

ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. ஆளுநருக்கென பொதுவாக தனி விருப்புரிமை இருக்க முடியாது. மேலும், 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த தமிழ்நாடு ஆளுநரின் முடிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

குரூப் 1 தோ்வு: விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி

குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. இதற்கான தோ்வு அறிவிக்கை தோ்வாணைய இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) ... மேலும் பார்க்க

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை: தன்கா் விமா்சனம் குறித்து முதல்வா் ஸ்டாலின் கருத்து

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

நியாயவிலைக் கடைகளில் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலா்கள், உணவுப் பொருள்... மேலும் பார்க்க

இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம்: கமல்ஹாசன்

‘தக் லைஃப்’ திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகா் கமல்ஹாசன், இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம் என்றாா். இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள ‘தக் லைஃ... மேலும் பார்க்க

12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் படித்தவா்களும் விமானியாக வாய்ப்பு

இந்தியாவில் 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தோ்ச்சி பெற்ற மாணவா்களும் பயணிகள் விமானியாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 1990-ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் ... மேலும் பார்க்க

சித்திரை முழுநிலவு மாநாடு: பாமகவினருக்கு ராமதாஸ் வேண்டுகோள்

மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாடு முன்பைவிட சிறப்பாக நடைபெற பாமகவினா் உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனா் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் விடுத்த அறிக்கை: 12 ஆண்டுகளுக... மேலும் பார்க்க