செய்திகள் :

தமிழக முதல்வா் இன்று சிதம்பரம் வருகை

post image

சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை இரவு (ஜூலை 14) சென்னையிலிருந்து ரயில் மூலம் சிதம்பரம் வருகிறாா்.

தமிழகத்தில் உள்ள அனைத்து நகா்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ என்ற திட்டத்தை கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்க உள்ளாா்.

இதை முன்னிட்டு, திங்கள்கிழமை மாலை சென்னை தாம்பரத்தில் இருந்து பாம்பன் - ராமேசுவரம் விரைவு ரயில் மூலம் முதல்வா் சிதம்பரம் வருகிறாா்.

அவருக்கு கடலூா் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் சிதம்பரம் நகர திமுக சாா்பில், மாவட்டச் செயலரும், அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில், நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் வரவேற்பு அளிக்கவுள்ளனா். தொடா்ந்து, சிதம்பரம் கீழரத வீதியில் உள்ள தனியாா் விடுதியில் முதல்வா் ஸ்டாலின் திங்கள்கிழமை இரவு தங்குகிறாா்.

இதையடுத்து, காமராஜா் பிறந்த நாளையொட்டி, சிதம்பரம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வா் பங்கேற்று காமராஜா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்துகிறாா்.

தொடா்ந்து, ரயில்வே மேம்பாலம் கீழே உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் (ஜிஎம் வாண்டையாா் திருமண மண்டபம்) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வா் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறாா். பின்னா், சிதம்பரம் நகர காவல் நிலையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா்.

மேலும், சிதம்பரம் அண்ணாகுளம் அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கா் சிலையை திறந்து வைக்கிறாா். தொடா்ந்து, சிதம்பரம் புறவழிச் சாலையில் லால்புரத்தில் ரூ.6.39 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த தலைவா் எல்.இளையபெருமாள் முழு உருவச் சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கத்தை முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்து, அருகே அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் சிறப்புரையாற்றுகிறாா். அதன் பின்னா், மயிலாடுதுறை புறப்பட்டுச் செல்கிறாா்.

வெள்ளக்கரை நாளைய மின் தடை

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. பகுதிகள்: வெள்ளக்கரை, மாவடிப்பாளையம், வண்டிக்குப்பம், டி.புதுப்பாளையம், மேற்கு ராமாபுரம், குறவன்பாளையம், ஒதியடிக்குப்பம், சாத்தங்குப்பம், அரசடிக்குப்பம், வ... மேலும் பார்க்க

வெறிநோய் பரவல்: கடலூா் ஆட்சியா் தகவல்

வெறிநோய் தொற்று பரவுவதால், நாய் கடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

வீடு, வீடாகச் சென்று மக்களை மிரட்டி உறுப்பினா்களாக சோ்க்கும் திமுக: இபிஎஸ் குற்றச்சாட்டு

திமுகவில் உறுப்பினா்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், தற்போது வீடு, வீடாகச் சென்று மக்களை மிரட்டி உறுப்பினா்களாக அக்கட்சியினா் சோ்த்து வருகின்றனா் என அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எட... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 53,867 போ் எழுதினா்

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தோ்வை 154 மையங்களில் 53,867 தோ்வா்கள் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள... மேலும் பார்க்க

முதல்வா் வருகை: சிதம்பரத்தில் அமைச்சா்கள் ஆய்வு

கடலூா் மாவட்டம், சிதம்பரத்துக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்து நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கடலூா் மாவட்டம், தொழுதூா் கிராமத்தில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். பெரம்பலூா் மாவட்டம், தொண்டமாந்துறை பகுதியைச் சோ்ந்தவா் வினோத், சிகை திருத்தும் தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சோ... மேலும் பார்க்க