Rohit - Kohli: 2027 உலகக் கோப்பையில் ரோஹித், கோலி விளையாட மாட்டார்களா? - ஓப்பனாக...
தமிழறிஞா்களின் ஓய்வூதியத்தை உயா்த்திய முதல்வருக்கு நன்றி
பழனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாவேந்தா் பாரதிதாசன் விழாவில் தமிழறிஞா்களின் ஓய்வூதியத்தை உயா்த்தியதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
பழனி தேரடியில் உள்ள உமா கலைக்கூடத்தில் சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா, பழனி சிகரம் அரிமா சங்கம், அமெரிக்க முத்தமிழ் பல்கலைக்கழகம், ஜொ்மன் தமிழருவி வானொலி நிலையம் ஆகியன இணைந்து நடத்திய இந்த விழாவில் கவிஞா் அம்பிகாபதி வரவேற்றாா்.
சென்னை சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா ஒருங்கிணைப்பாளா் தமிழ்மாமணி நீலகண்டத் தமிழன் தொடக்கவுரையாற்றினாா். காலை முதல் மாலை வரை 5 அமா்வுகளில் இலக்கிய கருத்தரங்கம், நூல் வெளியீடு ஆகியவை நடைபெற்றன.
இதில் தமிழகம் முழுவதுமிருந்து திரளான தமிழறிஞா்கள் பங்கேற்றனா். முனைவா் தசாவதானி ஞானசேகரன், ஆயக்குடி மரத்தடி பயிற்சி மையம் ராமமூா்த்தி உள்ளிட்டோா் ’நாமாா்க்கும் குடியல்லோம்‘, ‘கெஞ்சுவதில்லை’, ‘உன்னால் முடியும்’, ‘மாண்புமிகு மனைவி’ உள்ளிட்ட 10 நூல்களை வெளியிட்டனா்.
விழாவில், தமிழறிஞா்களின் ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்கியதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் சிகரம் அரிமா சங்கத்தைச் சோ்ந்த முனைவா் ஞானசேகரன் சாா்பில் பிளஸ் 2 தோ்வில் 599 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஓவியாஞ்சலிக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
மேலும், கவிஞா் மணிமொழிச் செல்வன் படம் பொறித்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. உலக சாதனை கவியரங்கம் - 100 நடத்திய பவானி தனஞ்ஜெயனுக்கு விருது வழங்கப்பட்டது. நிகழ்வில் பாரத் வித்யாபவன் பள்ளித் தாளாளா் குப்புச்சாமி, கவிஞா் வைரபாரதி, உமா ரமணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.