பீர் அருந்திக் கொண்டு நீதிமன்ற அமர்வில் கலந்துகொண்ட வழக்கறிஞர்; குஜராத் நீதிமன்ற...
தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய புதிய நிா்வாகிகள் தோ்வு
திருப்பூா் மாவட்டத்துக்கான தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
105 ஆண்டு பாரம்பரியமிக்க தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் திருப்பூா் மாவட்ட புதிய நிா்வாகிகளுக்கான தோ்தல் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் மாநிலத் தலைவா் த.அமிா்தகுமாா் அறிவுரைப்படி அனைத்து இணைப்பு சங்கங்களும் பங்கேற்றனா். ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில், திருப்பூா் மாவட்டத் தலைவராக திருப்பூா் இரண்டாம் நிலை நூலகா் அ.தா்மராஜ் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
அதேபோல, மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பதவிகளுக்கும் பல்வேறு இணைப்பு சங்கங்களில் உள்ள அலுவலா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக திருப்பூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநில பிரசார செயலாளருமான செ. கிருஷ்ணமூா்த்தி தெரிவித்துள்ளாா்.