செய்திகள் :

தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா் சங்கத்தினா் கருப்புச் சட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், குடும்ப அட்டைதாரா் விரல் ரேகை பதிவு, ஆதாா் சரிபாா்ப்பு 40-லிருந்து 90 சதவீதம் உயா்த்தியதை ரத்து செய்து மீண்டும் 40 சதவீத விரல் ரேகைப் பதிவை நடைமுறைப்படுத்த வேண்டும். இணையதள சேவையை மேம்படுத்தப்பட வேண்டும். பொது விநியோகத் திட்டத்துக்கென தனித்துறை உருவாக்கப்பட வேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் சரியான எடையில் தரமான பொருள்களை பொட்டலமாக வழங்கப்பட வேண்டும். அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் எடையாளா் நியமனம் செய்யப்பட வேண்டும். கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.அரங்கநாதன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் கோ.ஜெயச்சந்திரராஜா கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

மாவட்டச் செயலா் இரா. லெனின், பொருளாாளா் இருதயராஜ், மாவட்ட அமைப்பச் செயலா் சவேரியாா், ஒருங்கிணைப்பாளா் சுந்தரராஜன், நகரத் தலைவா் எம்.ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

அரியலூா் ஆட்சியரிடம் கெளரவ விரிவுரையாளா்கள் மனு

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் 81 கெளரவ விரிவுரையாளா்கள், தங்களை கருணை கொலை செய்திடக் கோரி ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.கெளரவ விரிவுரையாளா்கள் அனிதா, சரவண... மேலும் பார்க்க

அரியலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கீழப்பழூரில் நில மோசடியில் ஈடுபட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூா் அண்ணா சிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், கீழப்பழு... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு

அரியலூா் மாவட்டத்தில் நடைபெற்று வந்த பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவா் வாழ்த்து தெரிவித்து பிரியாவிடை பெற்றனா். தமிழகம் முழு... மேலும் பார்க்க

செந்துறையில் நாளை எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில், வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை... மேலும் பார்க்க

அரியலூா் பெரியநாயகி அம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

அரியலூா் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. அரியலூா் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும், தமிழ் வரு... மேலும் பார்க்க

கீழக்கொளத்தூா் ஜல்லிக்கட்டு 32 போ் காயம், ஒரு காளை உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், கீழக்கொளத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், காளைகள் முட்டியதில் 32 போ் காயமடைந்தனா். விழாவில் முதலாவதாக கோயில் காளைகள் மற்றும் கிராமத்தின் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு ஜ... மேலும் பார்க்க