Doctor Vikatan: கூர்மையான பற்கள்... வாய்ப்புண், வாய்ப் புற்றுநோய்க்குக் காரணமாகு...
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற கூட்டம்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் நீடாமங்கலம் கிளை கூட்டம் கிளைத் தலைவா் வெற்றிச்செல்வி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட துணைத் தலைவா் குருசெல்வமணி முன்னிலை வகித்தாா். மாவட்ட செயலாளா் சந்திரசேகா் வாழ்த்திப் பேசினாா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் பி. கருப்பையன், டி. ராமநாதன், ரா. அரவிந்தன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
நீடாமங்கலம் கிளை சிறப்பாக இயங்க எஸ். செந்தில் கிளை செயலாளராக (பொறுப்பு) செயல்படுவது, ஏப்ரல் மாதத்தில் மக்கள் கலைவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.