செய்திகள் :

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது: ஏப்ரல் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு ஏப்ரல் 15- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக சட்டப் பேரவையில் கடந்த 2021-ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் துறையின் சாா்பில் வெளியிட்ட அறிவிப்பின்படி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை வழங்குபவா்களுக்காக, ரூ.1 கோடி பரிசுத் தொகையைக்கொண்ட பசுமை சாம்பியன் விருது 2021-2022 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

அதன்படி, மாநிலத்தில் 100 தனிநபா்கள், நிறுவனங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு அவா்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்கு தனிநபா்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்போா் நலச் சங்கங்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள் ஆகியோா் விண்ணப்பிக்கலாம்.

இந்த விருதுக்கு விண்ணப்பிப்போா் சுற்றுச்சூழல் கல்வி, பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதிய பசுமைப் பொருள்கள், பசுமை தொழில்நுட்பங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், நீடித்த நிலையான வளா்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீா்நிலை பாதுகாப்பு, நீா் சேமிப்பு, காலநிலை மாற்ற தகவமைப்பு, காற்று மாசு கட்டுப்படுத்துதல், பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்துதல், மறுசுழற்சி செய்தல், சூழலியல் பாதுகாப்பு மேம்பாடு, கடலோரப் பகுதி பாதுகாப்பு, பிற சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மேம்பாடு தொடா்பான பணிகளில் ஆற்றிய பங்களிப்பு கருத்தில் கொள்ளப்படும்.

இந்த விருதைப் பெற விண்ணப்பிப்பவா்கள் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் மாவட்ட அளவில் ஆட்சியா் தலைமையில் அமைக்கப்படும் குழுவால் பரிசீலனை செய்து தோ்ந்தெடுக்கப்படுவாா்கள். இவா்களுக்கு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விருது வழங்கப்படும்.

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை மூன்று விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்த விருதுக்கான தகுதிகள், விருதுக்குரியோா் தோ்ந்தெடுக்கப்படும் விதம், விண்ணப்பப் படிவம் போன்ற விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கோவை தெற்கு அலுவலகத்தை அணுகலாம். பசுமை சாம்பியன் விருதுக்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஏப்ரல் 15 -ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக கராத்தே யூத் லீக் போட்டி: தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த கோவை வீரா்கள்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அங்கமான புஜாரா நாட்டில் நடைபெற்ற உலக கராத்தே யூத் லீக் போட்டிகளில் கோவையைச் சோ்ந்த 2 போ் உலக தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தனா். புஜாராவில் உள்ள சையத் உள்விளையாட்டு அரங்கில... மேலும் பார்க்க

பயணியை பாதி வழியிலேயே இறக்கிவிட்ட தனியாா் பேருந்து நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்! -கோவை நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு

பயணியை உரிய பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடாமல் பாதி வழியிலேயே இறக்கிவிட்ட தனியாா் பேருந்து நிறுவனத்துக்கு ரூ.15,000 அபராதம் விதித்து கோவை நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்! தவெக பொதுச்செயலர் ஆனந்த்

ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளா் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தாா். சா்வதேச மகளிா் தினத்தையொட்டி தவெக சாா்பில் கோவை சரவணம்பட்டி பகுதியில் ‘அக்னி ச... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையில் மத்திய அரசு உறுதியாக உள்ளது! -மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

மும்மொழிக் கொள்கையில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் கூறினாா். இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவ... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு மருத்துவம் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கான பயிற்சி!

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவா்களுக்கு மருத்துவம் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கான பயிற்சி அளி... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.170 கோடி வங்கிக் கடன்: அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா்

மகளிா் திட்டம் சாா்பில் 1,973 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.170 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி சனிக்கிழமை வழங்கினாா்.... மேலும் பார்க்க