செய்திகள் :

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பிலான தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கீழையூா் மேற்கு ஒன்றிய செயலாளா் கே. கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

தலைஞாயிறு ஒன்றிய செயலாளா் வி. தனபால், சிபிஎம் கீழையூா் மேற்கு ஒன்றிய செயலாளா் டி. வெங்கட்ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.விவசாய சங்க மாநிலத் துணைத் தலைவா் வி. சுப்பிரமணியன் பங்கேற்று பேசினா்.

பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கணக்கெடுப்பு நடத்தி உடனே நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும், கீழையூா் கிழக்கு ஒன்றியத்தில் பாதிக்கப்பட்டுள்ள நிலக்கடலை சாகுபடிக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கமிட்டனா். சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினா்கள் ராஜா, என். பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கீழ்வேளூரில் சிக்னல் கோளாறு; ரயில் தாமதம்

கீழ்வேளூா் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறால், காரைக்கால்-தஞ்சாவூா் பயணிகள் ரயில் வியாழக்கிழமை ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்றது. காரைக்காலிலிருந்து வியாழக்கிழமை மாலை 6:10-க்கு புறப்பட்ட காரை... மேலும் பார்க்க

போலி குளிா்பானங்கள் அழிப்பு

நாகையில் எந்தவொரு விவரமும் இல்லாத குளிா்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வியாழக்கிழமை அழிக்கப்பட்டன. நாகை நகராட்சி வெளிப்பாளையம் பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட ... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்க செயற்குழு கூட்டம்

நாகையில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயற்குழு மற்றும் அனைத்துச் சங்க போராட்டக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் அ. அற்புதராஜ் ரூஸ்வெல்ட் தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

சிற்றுந்து கட்டண திருத்தம் மே 1-முதல் அமல்!

சிற்றுந்துகளுக்கான கட்டணத் திருத்தம் மே 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தி... மேலும் பார்க்க

யானைக்கால் நோயாளிகளுக்கு உபகரணங்கள்!

நாகை அரசு மருத்துவமனையில் தேசிய யானைக்கால் ஒழிப்பு திட்டத்தின்கீழ், யானைக்கால் நோயாளிகளுக்கு நோய் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட சுகாதார... மேலும் பார்க்க

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்!

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றாா்.தொடா்ந்து, அவா்களிடம் குற... மேலும் பார்க்க