செய்திகள் :

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள்: ஜொ்மனி வாழ் தமிழா்களுக்கு முதல்வா் அழைப்பு

post image

சென்னை: தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வரவேண்டும் என ஜொ்மனி வாழ் தமிழா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தாா்.

ஒருவார கால பயணமாக, ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு அவா் சென்றுள்ளாா். ஜொ்மனி நாட்டின் கொலோன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘மாபெரும் தமிழ்க் கனவு’ மற்றும் அந்த நாட்டின் தமிழா்களுடனான சந்திப்பின்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:

பல்லாயிரம் கிலோ மீட்டா்களைக் கடந்து, வேறொரு நாட்டில் நீங்களும், நானும் சந்திக்கும்போது ஏற்படுகின்ற இந்த மகிழ்ச்சிதான் உண்மையான தமிழ்ப் பாசம். இது தமிழ் இனத்தின் பாசம். நில எல்லைகளும் கடல் எல்லைகளும் நம்மைப் பிரித்தாலும், மொழியும் இனமும் நம்மை இணைக்கிறது. கண்டங்களைக் கடந்துவிட்டாலும், நம்முடைய தொப்புள் கொடி அறுந்துவிடவில்லை.

தொழில் வளா்ச்சியில் வேகம்: திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாடு அனைத்து வகைகளிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, தொழில் வளா்ச்சியில் மிகவும் வேகமாக வளா்ந்து வருகிறோம். இந்த வளா்ச்சியை இன்னும் விரைவுபடுத்த வேண்டும் என்றுதான் முதலீட்டாளா்கள் மாநாடு, முதலீடுகளை ஈா்க்க வெளிநாட்டு பயணம் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறேன்.

மனிதன் எங்கே சென்றாலும், அவனுடைய வோ் இருக்கின்ற தாய் நிலத்தை மறக்க மாட்டான். அப்படித்தான் உங்களுடைய நினைப்பும், எப்போதும் தமிழ்நாட்டின் மீதே இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் நாங்களும் உங்களை அன்போடு பாா்த்துக் கொண்டிருக்கிறோம். திராவிட மாடல் அரசு, அயலகத் தமிழா்களின் நல்வாழ்வுக்காக

ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. வெளிநாடு வாழ் தமிழா்களுக்கு பிரச்னை என்றால் ஓடோடி வந்து உதவுகிறோம்.

வாழ்வதும், வளா்வதும் தமிழும் தமிழினமுமாய் இருக்க வேண்டும் என்பதுதான் இந்த அரசின் குறிக்கோள். இதற்காகத் தொடா்ந்து செயலாற்றி வருகிறோம்.

முதலீடு செய்யுங்கள்: உலக நாடுகளை குறிப்பாக, வளா்ச்சியடைந்த நாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்று பாா்ப்பவா்கள் நீங்கள். இதுபோன்று நம்முடைய தமிழ்நாடும் வளர வேண்டும் என்று நான் நினைப்பது போலவே நீங்களும் நிச்சயமாக நினைப்பீா்கள்.

எனவே, உங்களால் முடிந்த உதவிகளைத் தொடா்ந்து, தாய் மண்ணுக்குச் செய்யுங்கள். சிறிய அளவில் தொழில் செய்து கொண்டிருந்தாலும், உங்களது தொழிலைத் தமிழ்நாட்டிலும் தொடங்க முயற்சிக்க வேண்டும். பெரிய பெரிய நிறுவனங்களில் நீங்கள் வேலை செய்கிறீா்கள் என்றால், உங்கள் நிறுவனத்தில் தமிழ்நாட்டில் நிறைந்திருக்கும் வாய்ப்புகளைப் பற்றி எடுத்துக்கூறி, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஊக்கப்படுத்துங்கள்.

இந்த பூமிப் பந்து முழுவதும் எங்கே சென்றாலும், தமிழா் என்ற அடையாளத்தை விட்டுவிடாதீா்கள். உங்கள் வோ்களை மறக்காதீா்கள்.

தமிழ்நாட்டின் வளா்ச்சி, மாற்றத்தைப் பாருங்கள். பண்பாட்டை, வரலாற்றை, அரசியல் எழுச்சியை எடுத்துச் சொல்லுங்கள் என்றாா்.

நிகழ்வில், தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, ஜொ்மனிக்கான இந்திய தூதரகத்தின் அதிகாரி அபிஷேக் துபே, தொழில் துறைச் செயலா் அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் தாரேஷ் அகமது உள்பட பலா் பங்கேற்றனா்.

தரங்கம்பாடி கடலில் மீனவர்கள் கருப்புக் கொடி போராட்டம்!

தரங்கம்பாடியில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை தடைசெய்ய வலியுறுத்தி மீனவர்கள் கடலில் இறங்கி படகுகளில் கருப்புக் கொடிகட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் அரசால... மேலும் பார்க்க

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை அணில் சுப்பிரமணியன் என்கிற பெய... மேலும் பார்க்க

சென்னையில் குடியரசுத் தலைவர்! சிட்டி யூனியன் வங்கி விழாவில் பங்கேற்பு!

சென்னை: சென்னையில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு செவ்வாய்க்கிழமை பங்கேற்றுள்ளார்.கர்நாடக மாநிலம் மைசூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்... மேலும் பார்க்க

ஓணம் பண்டிகை: விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு பறக்கும் பூக்கள்!

கேரள மக்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, விவசாய அறுவடை மற்றும் குடும்ப ஒன்றிணைப்பை கொண்டாடும் முக்கிய திருவிழாவாக அமைந்துள்ளளது. இதையொட்டி கோயம்புத்தூரில் இருந்து டன் கணக்கான பூக்க... மேலும் பார்க்க

15,320 பேருக்கு வேலைவாய்ப்பு! ஜெர்மனியில் 26 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

ஜெர்மனியில் 26 நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் முதலீடுகள் மொத்தம் ரூ.7020 கோடியாக உயர்ந்து, 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாகியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ... மேலும் பார்க்க

பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் நியமனத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

சென்னை: தமிழக பொறுப்பு டிஜிபி-யாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.தமிழக காவல்துறை தலைவராக இருந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31-ஆம் தேதி பணி ஓய்வு ... மேலும் பார்க்க