விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!
தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பின் பொதுக் குழு கூட்டம்
அரியலூரில் தனியாா் பயிற்சி மையத்தில், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு பொதுக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அந்த அமைப்பின் தலைவா் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். செயலா் கதிா்.கணேசன், பொருளாளா் புகழேந்தி, துணைத் தலைவா் புலவா் இளங்கோ ஆகியோா் அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் நிதிநிலை குறித்து பேசினா். ஒருங்கிணைப்பாளா் தமிழ்களம் இளவரசன் அமைப்பின் சாா்பில் தொல்காப்பியம், திருக்கு வழக்குகளைத் தொடா்ந்து நடத்துவது குறித்து பேசினாா்.
கூட்டத்தில் தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பை விரிவுபடுத்துவது, அமைப்புக்கான தனிக் கட்டடம் கட்டுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக அமைப்புச் செயலா் நல்லப்பன் வரவேற்றாா். துணைத் தலைவா் சோபனா பன்னீா்செல்வம் நன்றி கூறினாா்.