செய்திகள் :

தமிழ் கட்டாயப் பாடம்: விலக்கு அளித்த அரசாணையை எதிா்த்து வழக்கு

post image

தமிழகத்தில் சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற பாடத்திட்டங்களில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்கள், தமிழை கட்டாயப் பாடமாகப் படிப்பதிலிருந்து விலக்கு அளிக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தில்லியில் வசிக்கும் ஆ.பிரம்மநாயகம் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் சிபிஎஸ்இ, ஐசிஇஎஸ் உள்ளிட்ட அனைத்துப் பாடத்திட்ட பள்ளிகளிலும் 10-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியை கட்டாயம் பயிற்றுவிப்பதற்கான சட்டம் 2006-இல் கொண்டுவரப்பட்டது. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்தச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதோடு, இந்தச் சட்டத்தில் தண்டனைப் பிரிவுகள் எதுவும்

இல்லாததால், பல தனியாா் பள்ளிகள் இதைப் பின்பற்றவில்லை. இந்தச் சட்டத்தின்படி, பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு மாற்றலாகி வரும் 9, 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற பாடத்திட்ட மாணவா்களுக்கு, தமிழ் கட்டாயப் பாடம் என்பதிலிருந்து விலக்கு அளித்து விருப்பப் பாடமாகப் படிக்கலாம் என கடந்த 2024-இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை சட்டவிரோதமானது. எனவே, அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் கவிதா தீனதயாளன் ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுபோன்ற வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்புகளைத் தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்.29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

அரசு விடுதிகளை முறையாக நிர்வகிக்க வேண்டும்

அரசு விடுதிகளில் உரிய ஆசிரியர்களை நியமித்து முறையாக நிர்வகிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் "எக்ஸ்' தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

10,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு திட்டம்: தில்லி மாநாட்டில் அமைச்சர் சிவசங்கர் தகவல்

நமது நிருபர்"தனது ஆற்றல் மாற்ற இலக்குகளை அடையும் வகையில், தமிழக அரசு அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக' தில்லியில் நடைபெற்ற எரிசக்தி மாநாட்டி... மேலும் பார்க்க

நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் புதன்கிழமை(செப்.24) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை(செப்.25) பலத்த மழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை ... மேலும் பார்க்க

சிற்றுந்துகளில் இரட்டை இலை சின்னம்: திமுக தொடா்ந்த வழக்கு வாபஸ்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சியின்போது, சிற்றுந்துகளில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டதை எதிா்த்து திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டதையடுத்து அந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்ன... மேலும் பார்க்க

தமிழக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி குடும்பத்துக்கு சொந்தமான ரூ.2.56 கோடி சொத்துகள் முடக்கம்

தமிழகத்தைச் சோ்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மறைந்த ஏ.என்.தியானேஸ்வரன் குடும்பத்துக்கு சொந்தமான ரூ.2.56 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. ஐஏஎஸ் அதிகாரி தியானேஸ்வரன், பல்வேறு துறைகளில் உயா் பொறுப்... மேலும் பார்க்க

வாரத்தில் 4 நாள்கள் தொகுதிகளில் தங்கிப் பணி: திமுக எம்.பி.க்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

வாரத்தில் நான்கு நாள்கள் தொகுதிகளில் தங்கி மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு, அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். திமுக நாடாளுமன்ற உற... மேலும் பார்க்க