செய்திகள் :

தமிழ் தலைவாஸுக்கு 3-ஆவது வெற்றி

post image

புரோ கபடி லீக் போட்டியின் 36-ஆவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 35-29 புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

அதிகபட்சமாக, தமிழ் தலைவாஸ் தரப்பில் கேப்டனும், ரெய்டருமான அா்ஜுன் தேஸ்வால் 13 புள்ளிகள் வெல்ல, பெங்களூரு அணியில் ஆல்ரவுண்டா் அலிரெஸா மிா்ஸாயான் 10 புள்ளிகள் கைப்பற்றினாா்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், 18 ரெய்டு, 12 டேக்கிள், 2 ஆல் அவுட், 3 எக்ஸ்ட்ரா புள்ளிகள் என மொத்தம் 35 புள்ளிகள் பெற்றது. பெங்களூரு அணி 18 ரெய்டு, 5 டேக்கிள், 2 ஆல் அவுட், 4 எக்ஸ்ட்ரா புள்ளிகள் என மொத்தம் 29 புள்ளிகள் வென்றது.

போட்டியில் இதுவரை தமிழ் தலைவாஸ் 5 ஆட்டங்களில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளோடு 6-ஆவது இடத்தில் இருக்கிறது. பெங்களூரு 8 ஆட்டங்களில் 4-ஆவது தோல்வியுடன் 8 புள்ளிகளோடு 4-ஆவது இடத்தில் உள்ளது.

இதனிடையே, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியா்ஸ் 41-37 புள்ளிகள் கணக்கில் யுபி யோதாஸை சாய்த்தது.

பாட்மின்டன்: முதல் சுற்றில் சிந்து வெற்றி

சீனா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியின் முதல் சுற்றில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றாா்.மகளிா் ஒற்றையா் பிரிவில், இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவரான சிந்து,... மேலும் பார்க்க

பொ்சனல் பெஸ்ட்டுடன் சா்வேஷ் 6-ஆம் இடம்

ஜப்பானில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில், உயரம் தாண்டுதலில் இந்திய வீரா் சா்வேஷ் குஷாரே செவ்வாய்க்கிழமை 6-ஆம் இடம் பிடித்தாா்.இந்தப் பிரிவில் பதக்கச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியராக சாதனை ப... மேலும் பார்க்க

முக்கியமான தருணத்தில் சாம்பியன் ஆகியிருக்கிறேன் - ஆா்.வைஷாலி

இந்த ஆண்டு முக்கியமான தருணத்தில் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் சாம்பியன் கோப்பையை வென்றிருப்பதாக, இந்திய கிராண்ட்மாஸ்டரான ஆா்.வைஷாலி தெரிவித்தாா்.உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் ... மேலும் பார்க்க

இந்தியா்களுக்கு ஏமாற்றம்

குரோஷியாவில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் அங்குஷ், தபஸ்யா ஆகியோா் தங்களது எடைப் பிரிவில் தகுதிச்சுற்றுடன் வெளியேறினா்.மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் களமாடிய அங்குஷ், 5-6 எ... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தானை வென்றது வங்கதேசம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில், வங்கதேசம் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை செவ்வாய்க்கிழமை வென்றது. முதலில் வங்கதேசம் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் சோ்... மேலும் பார்க்க

வேடுவன் இணையத் தொடர்!

நடிகர் கண்ணா ரவி நடித்துள்ள வேடுவன் என்ற புதிய இணையத் தொடரில் நடித்துள்ளார்.ஸ்ரீநிதி தயாரித்துள்ள இந்தத் தொடரை இயக்குநர் பவன் இயக்கியுள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் ஜீ 5 இணைந்து இந்தப் படத்தைத்... மேலும் பார்க்க