தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ரெட்ரோ டீசர்..!
நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் டீசர் வெளியாகியுள்ளது.
சூர்யா - 44 என நீண்ட நாள்களாக அழைக்கப்பட்டு வந்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் - நடிகர் சூர்யா கூட்டணி திரைப்படத்தின் பெயர் டீசரை கடந்த டிச. 25 ஆம் தேதி வெளியிட்டனர்.
ஆக்சன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ரெட்ரோ எனப் பெயரிட்டுள்ளனர். இதில், பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
ரெட்ரோ திரைப்படம் மே. 1 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவிந்திருந்தது.
டீசரில் பூஜா ஹெக்டேவுக்கு எந்த வசனமும் இல்லாமல் இருந்தது. இதுகுறித்து, ரசிகர்களிடம் கேள்விகள் எழுந்த நிலையில், இப்படத்தில் பூஜா வாய் பேச முடியாதவராக நடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் இதன் டீசர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, வெளியான இதன் தமிழ் டீசர் 2.5 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.